’இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏர் டெகான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் படத்தை பற்றிய புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
சூரரைப் போற்று - அறிவு எழுத்தில் சூர்யா பாடிய மாறா ராப்! - மாறா தீம்
‘சூரரைப் போற்று’ படத்தில் பாடலாசிரியர் அறிவு எழுதிய ராப் வரிகளை சூர்யா பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
soorarai pottru
’அஞ்சான்’ படத்தில் ‘ஏக் தோ தீன்’, ’பார்ட்டி’ படத்தில் ‘ஜா ஜா ஜாரே’ ஆகிய பாடல்களை பாடிய சூர்யா, ‘சூரரைப் போற்று’ படத்தில் ராப் வரிகளை பாடியுள்ளார். இதனை ’காலா’, ‘வடசென்னை’ புகழ் பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ளார். இதுகுறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், மிஸ்டர். மாறா ராப்ஸ்.. மாறா தீம் பாடலுக்கு சூர்யா ராப் பாடியுள்ளார் என குறிப்பிட்டிருக்கிறார்.