தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆஸ்கர் போட்டியில் நின்று விளையாடும் சூரரைப் போற்று! - soorarai pottru joins oscar

ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

soorarai pottru joins oscar second round
soorarai pottru joins oscar second round

By

Published : Feb 26, 2021, 3:16 PM IST

ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளியன்று ஓடிடியில் இப்படம் வெளியானது. ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டை பெற்ற இப்படம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
அண்மையில் ஆஸ்கர் விருது போட்டியில் சூரரைப் போற்று பங்கேற்றுள்ளதாக கடந்த மாதம் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் ஆஸ்கர் விருதுக்கு தகுதிபெற்ற 366 படங்களில் சூரரைப் போற்று படமும் இடம்பெற்றுள்ளது.

சிறந்த படம். சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. மார்ச் 15ஆம் தேதி ஆஸ்கர் விருதுக்கு தகுதிபெறும் படங்களின் இறுதிப்பட்டியல் வெளியாகிறது. ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க:டான் படத்தில் இணைந்த 'தோழர்'!

ABOUT THE AUTHOR

...view details