சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. திரைப்படம் வெளியானதிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தச் சூழலில் இந்த ஆண்டு நிகழவிருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு பொதுப்பிரிவில் இத்திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், பின்னணி இசை போன்ற பிரிவுகளின் கீழ் இத்திரைப்படம் தேர்வாகியுள்ளது. தற்போது இன்று (ஜன. 26) அகாடமி ஸ்கிரீனிங் ரூமில், இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது.