தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விரைவில் வருகிறது 'சூரரைப் போற்று' பர்ஸ்ட் லுக்! - Suriya38

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Soorarai Pottru

By

Published : Oct 27, 2019, 10:21 PM IST

'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பெயரெடுத்த இயக்குநர் சுதா கொங்கரா. இவர் நடிகர் சூர்யாவை வைத்து 'சூரரைப் போற்று' படத்தை இயக்கி வருகிறார்.

சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச்சுற்று' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அவர் தமிழில் இயக்கும் மூன்றாவது படமான 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், வருகிற நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மன்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இதையும் படிங்க:'பலே பாண்டியா' படத்தோடு சுஜித் சம்பவத்தை ஒப்பிட்ட விவேக்!

ABOUT THE AUTHOR

...view details