தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பேச்சிலர்' ஓடிடி உரிமையைக் கைப்பற்றியது யார்? - kollywood cinema latest news

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நாளை திரையரங்கில், வெளியாகவுள்ள 'பேச்சிலர்' திரைப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம் குறித்து கீழே உள்ள செய்தியில் காணலாம்.

'பேச்சிலர்' ஓடிடி உரிமையைக் கைப்பற்றியது யார்?
'பேச்சிலர்' ஓடிடி உரிமையைக் கைப்பற்றியது யார்?

By

Published : Dec 2, 2021, 9:31 PM IST

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் 'பேச்சிலர்'. அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்துள்ளார்.

இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு இப்படத்தைத் தயாரித்துள்ளார். திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், நீண்ட நாள்களாக திரைப்படம் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்தத் திரைப்படம் நாளை (டிச.3) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பேச்சிலர் படத்தின் ஓடிடி உரிமையை சோனி லைவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இளைஞர்களைக் கவர்ந்து வசூலைக் குவிக்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பா. ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்; விரைவில் சியான் 61 படப்பிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details