தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா பாதித்த பெண்ணுக்கு விமான ஆம்புலன்ஸ் அனுப்பிய சோனு சூட் - sonu sood movies

படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்ட கரோனா நோயாளியை நடிகர் சோனு சூட் விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து உதவி செய்துள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்

By

Published : May 4, 2021, 2:31 PM IST

கரோனா பொது முடக்கம் காரணமாகப் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவரவர் சொந்த ஊர் திரும்ப, போக்குவரத்து வசதி செய்துகொடுத்தவர் நடிகர் சோனு சூட். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளை மூலம் அவர் வழங்கினார். கரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய நிகழ்வு குறித்து புத்தகம் ஒன்றையும் சோனு சூட் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தனக்கு ஹைதராபாத்தில் சிகிச்சை மேற்கொள்ள உதவி செய்யுமாறும் சோனு சூட்டிடம் உதவி கோரியுள்ளார்.

உடனே நடிகர் சோனு சூட், தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து அவரை ஹைதராபாத் அழைத்து வர உதவி செய்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் சோனு சூட்டின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details