தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

100 ஏழை மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்து அசத்திய சோனு சூட் - சோனு சூட் படங்கள்

நடிகர் சோனு சூட் மகாராஷ்டிராவில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்

By

Published : Jan 12, 2021, 9:12 PM IST

கரோனா ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களது வீட்டிற்குப் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்து நடிகர் சோனு சூட் இலவசமாக அனுப்பினார். பேருந்து மட்டுமில்லாமல், தனி விமானம் மூலமாகவும் சிலரை அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைத்தார்.

அத்துடன் வறுமையில் வாடிய விவசாயி குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கியது, ஸ்பெயினில் சிக்கித்தவித்த சென்னை மாணவர்களை வீடு திரும்ப, விமான வசதி செய்துகொடுத்தது என்று அடுக்கடுக்காக பல உதவிகளை நடிகர் சோனு சூட் செய்துவருகிறார்.

இந்நிலையில் சோனு சூட் மகாராஷ்டிராவில் உள்ள 6 பள்ளி மாணவர்களைச் சேர்ந்த, 100 ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடைபெற்றுவருகிறது. அதில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு சோனு சூட் ஸ்மார்ட் போன்கள் வாங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இனிமே ஹீரோதான்; சோனு சூட் படத்துக்கு அமிதாப் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details