தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனமாடியுள்ளவர் சிவசங்கர். இவர் 'மகதீரா', 'திருடா திருடி' உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகவும், ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார்.
இவருக்குக் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இவரின் மருத்துவச் செலவுக்கு அதிகப் பணம் தேவைப்படுவதால், திரையுலகப் பிரபலங்கள் உதவுமாறு அவரது மகன் சமூக வலைதளங்களில் கோரிக்கைவைத்திருந்தார்.
இந்நிலையில் சிவசங்கர் குறித்து தகவலறிந்து நடிகர் சோனு சூட் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ஏற்கனவே அவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறேன். என்னால் அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்த அளவு உதவி செய்வேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'தமிழ் படம்' இயக்குநருடன் கைக்கோர்த்த விஜய் ஆண்டனி