தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இளம்பெண்ணின் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உதவிய சோனு சூட்! - sonu sood up girl treatment

நடிகர் சோனு சூட் இளம்பெண்ணின் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்

By

Published : Aug 14, 2020, 5:13 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக தங்களது சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததில் பெரும் பங்காற்றியவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். அதுதவிர தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பிரக்யா மிஸ்ராவுக்கு(22) விபத்தில் முழங்கால் மூட்டு பாதிப்படைந்தது. இதனால் அப்பெண் அறுவை சிகிச்சை செய்ய உதவுமாறு சோனு சூட்டை ட்விட்டரில் டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இதைக்கண்ட சோனு சூட், காசியாபாத்தில் உள்ள மருத்துவரிடம் பேசி, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்தார். இதுகுறித்து பதிவு செய்த அவர், "மருத்துவரிடம் பேசியுள்ளேன். உங்களுக்கான பயண செலவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அறுவை சிகிச்சை நடைபெறும். விரைவில் குணமடைய வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அப்பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட்.12) முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து அந்த இளம் பெண்ணின் பெற்றோர் சோனு சூட்டிற்கு நன்றி தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details