மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் 'நெற்றிக்கண்'. இந்தப் படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், தனது ரௌடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் நயன்தாராவுடன் வடசென்னை சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். கொரியன் மொழில் வெளியான ‘பிளைண்ட்’ என்னும் திரைப்படத்தின் ரீமேக்கே நெற்றிக்கண்.
இங்க நம்ம நயன்தாரா...அங்க சோனம் கபூர்...இந்தியில் ரீமேக் ஆகும் ‘பிளைண்ட்’ - பிளைண்ட் ரீமேக் இந்தி
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'நெற்றிக்கண்' படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்தில் பார்வை இழந்த பெண், தனது அறிவாற்றலால் எப்படி கொடூரமான சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.
இதனையடுத்து, இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய்படுகிறது. இதில் நயாகியாக சோனம் கபூர் நடிக்கிறார். கஹானி பட இயக்குநர் சுஜோய் கோஷ் தயாரிக்கிறார். ஷோமி மதிஜா இயக்குகிறார். மேலும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.