சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் பல நாடுகளை அச்சுறுத்திவருகிறது. அந்தவகையில் இந்தியாவுக்குள் புகுந்த இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. மேலும் திரைத் துறையைச் சேர்ந்த பலரும் ரசிகர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
அந்த வகையில் நடிகை சோனம் கபூர் கொரோனா வைரசிலிருந்து எப்படி தங்களைக் காத்துக்கொள்வது என்பது குறித்து ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், 'கொரோனா வைரசிலிருந்து தப்பிக்க சுகாதாரமே சிறந்த வழியாகும். கைகளை நன்கு கழுவுதல், உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.