தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிம் சென்ற புகைப்படத்தை வெளியிட்ட சோனம் கபூர்! - Latest kollywood news

நடிகை சோனம் கபூர் நீண்ட நாள்கள் கழித்து ஜிம் சென்ற புகைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சோனம் கபூர்
சோனம் கபூர்

By

Published : Jul 28, 2020, 3:12 PM IST

கரோனா வைரஸ் காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கால் நடிகை சோனம் கபூர் கடந்த சில மாதங்களாக டெல்லியிலிருந்த நிலையில், சமீபத்தில் கணவருடன் இணைந்து லண்டன் சென்றார்.

இதையடுத்து அரசு அறிவுறுத்தியுள்ளது போல் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது 14 நாள்கள் முடிந்த நிலையில், உற்சாகம் அடைந்துள்ள சோனம் கபூர், நேராக ஜிம்முக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மீண்டும் ஜிம்முக்கு வந்துவிட்டேன். நான் நினைத்துப் பார்க்கவில்லை. இங்கே திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு" என்று பதிவிட்டுள்ளார்.

மகளின் பதிவை கண்ட தந்தை அனில் கபூர், “சோனம்… யூ ஆர் ட்ரூலி இன்ஸ்பையரிங். எனக்கு ஜிம் மிகவும் பிடித்தமான இடம்" என்று பதிலளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details