சமீபத்தில் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்த கரீனா கபூர், சில நாட்களிலேயே சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தினம்தோறும் புகைப்படம் பகிர்வதன் மூலம், அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.6 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. 1.6 மில்லியன் நெட்டிசன்களை கரீனா கொண்டிருந்தாலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் வெறும் 18 பேர் மட்டுமே அவரை பின்தொடருகின்றனர். குடும்ப உறுப்பினர்களாக கரீஷ்மா கபூர், கசின் சோஹா அலிகான் அவரது கணவர் குணால் கெம்மு, நண்பர்கள் அமிர்தா அரோரா, மலாக்கா அரோரா உள்ளிட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இதில் கரீனா கபூரின் கணவர் சைஃப் அலிகானின் மகளும், நடிகையுமான சாரா அலி கான் கரீனாவை இதுவரை பின்தொடரவில்லை. இது நெட்டிசன்கள் மத்தியில் சந்தோகத்தை ஏற்படுத்தியது. சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாரா அலிகான், கரீனாவை பின் தொடராததால், அவர்களுக்கு பிரச்னை ஏதேனும் உள்ளதா என சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் விவாதிக்க தொடங்கினர்.
இதையடுத்து, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சாரா அலிகான் தனது கருத்தை கூறியுள்ளார். அதில், கரீனா கபூரையும் அவரது நடிப்பு திறமையும் பாராட்டுகிறேன். அவர் எப்போதும் தனது வேலைக்கு முன்னுரிமை கொடுப்பவர். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இதை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட ஒன்று. இது எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. இந்த உலகம் எதையும் யோசிக்காமல் விரைவில் முடிவெடுத்துவிடுகிறது. எனக்கும் கரீனா கபூருக்கும் இடையில் எப்போதும் நல்லுறவு இருக்கிறது என்றார்.
இதையும் வாசிங்க: பிகினி உடையில் தம்பியுடன் போஸ் கொடுத்த சாரா அலி கான்- வசைபாடும் நெட்டிசன்கள்