தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கலைஞர்களைக் காப்பதும் நமது பொறுப்பு - பாடலாசிரியர் சினேகன் - sneham chyalagam

நடிகர் தீப்பெட்டி கணேசனின் இரண்டு குழந்தைகளின் இந்தாண்டு கல்விச் செலவினை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகப் பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார்.

Snehan
Snehan

By

Published : Apr 23, 2020, 3:25 PM IST

'ரேணிகுண்டா', 'பில்லா 2', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இவர் ஒரு மாற்றுத்திறனாளியும்கூட. தற்போது ஊரடங்கு உத்தரவால் இவர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இவரது நிலைமையை அறிந்து நடிகர் சங்கத்திலிருந்து உதவிசெய்து கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து நடிகர் அஜித் தனக்கு உதவுமாறு தீப்பெட்டி கணேசன் கண்ணீர் மல்க தனியார் யூ-ட்யூப் சேனலுக்கு தனது நிலமையை விளக்கிப் பேட்டி ஒன்று அளித்தார். இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகவே லாரன்ஸ் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

தற்போது தீப்பெட்டி கணேசன் குடும்பத்தை பாடலாசிரியர் சினேகன் நேரில் சந்தித்து உதவிசெய்துள்ளார். இது குறித்து சினேகன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது குழந்தைகளுக்கு பால் வாங்கக்கூட வசதியில்லை எனக் கண்ணீர் மல்க ஒரு பதிவினை வலைதளத்தில் நடிகர் தீப்பெட்டி கணேசன் மனம் உருக பதிவிட்டிருந்தார்.

அவரை நான் சந்தித்து எனது 'சினேகம் செயலகம்' என்ற அறக்கட்டளையின் சார்பில் இரண்டு வாரத்திற்கான அனைத்து உணவுப் பொருள்களை வழங்கியதோடு அவரின் இரண்டு குழந்தைகளின் இந்தாண்டு கல்விச் செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்ற நம்பிக்கை தந்துவிட்டுவந்தேன்.

இதுபோல பல கலைஞர்களுக்கு பல உதவிகள் இந்தத் தருணத்தில் தேவைப்படுகிறது. மனம் உள்ளவர்களும் பணம் உள்ளவர்களும் உதவ முன்வாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details