தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேன்சர் அறிகுறி: திசுக்கள் பரிசோதனை செய்து கொண்ட ஹக் ஜேக்மேன்!

ஹக் ஜேக்மேன் இதுவரை 5 முறை தோல் கேன்சருக்கான சிகிச்சை பெற்றுள்ளார். கடைசியாக 2017ஆம் ஆண்டு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

By

Published : Aug 3, 2021, 4:49 PM IST

x-men actor
x-men actor

தோல் கேன்சர் காரணமாக அவ்வப்போது சிகிச்சை பெற்று வரும் ஹக் ஜேக்மேனுக்கு, தழும்பு ஒன்று உறுத்தலாக இருந்த காரணத்தால் திசுக்கள் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்.

எக்ஸ் மேன், வுல்வரைன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்படுபவர் ஹக் ஜேக்மேன். இவர் மூக்கின் மேல் ஏற்பட்டுள்ள தழும்பு கேன்சர் அறிகுறியாக இருக்கலாம் என கருதி, திசுக்கள் பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், எனது மருத்துவர்கள் லிசா, ட்ரெவோர் ஆகியோரை சந்தித்தேன். அவர்கள் என் மூக்கின் மேல் உள்ள தழும்பு பார்ப்பதற்கு இயல்பாக இல்லை என திசுக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். நல்லதே நடக்கும் என நம்புகிறேன். யாரும் என்னைப் போல அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். உடலில் சிறு பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். பரிசோதனை முடிவு குறித்து உங்களிடம் நிச்சயம் பகிர்ந்துகொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

கேன்சர் அறிகுறி: திசுக்கள் பரிசோதனை செய்து கொண்ட ஹக் ஜேக்மேன்

ஹக் ஜேக்மேன் இதுவரை 5 முறை தோல் கேன்சருக்கான சிகிச்சை பெற்றுள்ளார். கடைசியாக 2017ஆம் ஆண்டு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘அண்ணாத்த’ டப்பிங் பணிக்கு ரெடியான குஷ்பு

ABOUT THE AUTHOR

...view details