வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் முக்கியமான நடிகர் சிவகார்த்திகேயன். 'சீமராஜா' படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் 'மிர்.லோக்கல்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனைத்தொடர்ந்து நேற்று இன்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் சைன் பிக்ஷன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்திலும், இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.