இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr.லோக்கல் படம் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடிக்க உள்ளார்.
ஓ... இவங்க தான் 'எஸ்கே 16' டீமா..! - Mr.லோக்கல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் ‘SK16’ படத்தில் நடிகைகள், நகைச்சுவை நடிகர்களை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன்
இதனையடுத்து, சிவகார்த்திகேயனின் 16வது படத்தை பாண்டிராஜ் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார்.
இதில் நடிக்கவுள்ள நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள் பற்றிய அறிவிப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேலும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க உள்ளனர். நகைச்சுவை நடிகராக சூரியும், யோகி பாபுவும் நடிக்கின்றனர்.