தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எஸ்.ஜே.சூர்யா நடித்து 'யு' சான்றிதழ் பெற்ற படம் இதுதான்..! - priya bhavani sangar

தான் நடித்த 'மான்ஸ்டர்' திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது எனக்கு இன்னும் ஒரு கனவாகவே இருப்பதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

மான்ஸ்டர்

By

Published : May 8, 2019, 5:35 PM IST

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள 'மான்ஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், நடன இயக்குநர் சாபு ஜோசப், படத்தில் நடித்த அனைவரும் கலந்துகொண்டனர்.

மான்ஸ்டர் படக்குழுவினர்

இதையடுத்து பேசிய படத்தின் நாயகி பேசிய பிரியா பவானி சங்கர், 'இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டினின் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், கிராஃபிக்ஸ் ஏதும் இல்லாமல் உண்மையான எலியை வைத்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம்' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், நெல்சன் வெங்கடேசன்

இதனைத்தொடர்ந்து பேசிய எஸ்.ஜே.சூர்யா, படத்தை பார்க்கும் குழந்தைகள் எலியோடு சேர்த்து என்னையும் மிகவும் ரசிப்பார்கள். இயக்குநர் தன்னிடம் படத்தின் வில்லன் எலி என்றதும், என்ன சார் பல புலிகளுக்கு வில்லனா இருந்த என்னை எலியோட நடிக்க சொல்றிங்க என்றேன். நான் நடித்து முதல் முறையாக 'யு' சான்றிதழ் பெற்ற படம் 'மான்ஸ்டர்' தான். தமிழ் சினிமாவில் நான் நடித்து 'யு' சான்றிதழ் பெற்ற படம் என்பது எனக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது. இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்தார்.

என்ன ஒரு தன்னடக்கம், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்,

'மான்ஸ்டர்' திரைப்படம் வருகின்ற மே 17ஆம் தேதி வெளியாகிறது.

ABOUT THE AUTHOR

...view details