தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பிரியா பவானி சங்கரும் நானும் நல்ல நண்பர்கள்; வெறுப்பேற்றாதீர்கள்' - கடுப்பில் எஸ்.ஜே. சூர்யா

பிரியா பவானிசங்கர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவே, தயவு செய்து வெறுப்பேற்றாதீர்கள் என்று எஸ்.ஜே. சூர்யா கடுப்பில் ட்வீட் ஒன்று செய்துள்ளார்.

SJS
SJS

By

Published : Jan 16, 2020, 8:24 AM IST

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த மான்ஸ்டர் படத்தில், எஸ்.ஜே. சூர்யா முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவைமிக்க நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்தப் படம் அனைத்து விதமான ரசிகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மான்ஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து வருகிறார். இதிலும் பிரியா பவானிசங்கரே நயாகியாக நடிக்கிறார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எல்.எல்.பி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிப்ரவரி 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், பிரியா பவானி சங்கரிடம் எஸ்.ஜே. சூர்யா தனது காதலைத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், 'பிரியா பவானிசங்கரிடம் நான் காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார் என்று சில முட்டாள்கள் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். மான்ஸ்டர் படத்தில் இருந்து அவர், எனக்கு நல்ல நண்பர். நல்ல நடிகையும் கூட. தயவு செய்து வெறுப்பேற்றாதீர்கள். தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள். நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

குரல் பிரச்சனையால் போலீஸ் ஆவதற்கு சிரமப்படும் 'டாணா' வைபவ்

ABOUT THE AUTHOR

...view details