'மொழி' படத்தின் இயக்குநர் ராதாமோகன், நடிகர் எஸ்ஜே.சூர்யாவை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார். வித்தியாசமான ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகப் போகும் இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
எஸ்ஜே சூர்யாவின் புதிய திரைப்படம் ஆரம்பம்! - யுவன் சங்கர் ராஜா
நடிகர் எஸ்ஜே சூர்யாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
![எஸ்ஜே சூர்யாவின் புதிய திரைப்படம் ஆரம்பம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4700738-629-4700738-1570629120977.jpg)
sj suriyah
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்குப் பிறகு யுவன் சங்கர் ராஜாவும் எஸ்ஜே சூர்யாவும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் பிரியா பவனிசங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்தாண்டு காதலர் தினத்தில் இப்படத்தை வெளியிடவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் வாசிங்க: கதை கேட்டுவிட்டு படம் பார்... இது எஸ்.ஜே சூர்யா ஸ்டைல்