தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நவம்பர் 25 தான் தீபாவளி...' - எஸ்.ஜே.சூர்யா ட்வீட் - maanaadu dubbing

மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியான நவம்பர் 25ஆம் தேதி தான் உண்மையான தீபாவளி என நடிகர் எஸ்.ஜே.சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

மாநாடு
மாநாடு

By

Published : Oct 26, 2021, 3:33 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் அதேநாள் ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படம் வெளியாவதால் படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தில் காவலராக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, ’மாநாடு’ படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நான் மாநாடு படத்தின் எட்டு நாள் டப்பிங் பணிகளை, ஐந்து நாள்களில் முடித்துவிட்டேன். என்னுடைய நாடி நரம்பு, முதுகு, கழுத்து, தொண்டை எல்லாம் வலிக்கிறது.

எனக்கு கண்டிப்பாக 10 நாள்களாவது ஓய்வு தேவை என நினைக்கிறேன். மாநாடு படத்தைப் பார்த்தவுடன், உங்கள் அனைவருக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். தீபாவளி நவம்பர் 25 தான்டா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மகளின் 'ஹூட்' செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details