'ஷியாமாராகம்' மலையாள படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது. இந்த படத்தில் கே.ஜே.யேசுதாஸ் அவருடைய மகன் விஜய் யேசுதாஸ், அவருடைய மகள் அமயா விஜய் யேசுதாஸ் என மூன்று தலைமுறையினரும் இணைந்து தட்சிணாமூர்த்தி இசையில் பாடியுள்ளனர்.
இந்த விழாவில் யேசுதாஸ், ஒய்.ஜீ.மகேந்திரன், மதுவந்தி , விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது யேசுதாஸ் பேசுகையில், 'பகவான் கொடுத்த வரப்பிரசாதம்தான் நான் இன்னமும் பாடிக் கொண்டிருப்பது. கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்திற்கு விருதுகள் கிடைக்கும்’ என்றார்.