தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெங்கட் பிரபுக்காக சங்கமிக்கும் 6 இசையமைப்பாளர்கள்! - six music directors

சிம்புதேவன் இயக்கத்தில் 'கசட தபற' படத்திற்கு ஆறு இசை பிரபலங்களை ஒன்று சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

கசட தபற

By

Published : May 24, 2019, 9:41 PM IST

இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் 'கசட தபற' திரைப்படத்தில் ஆறு என்கிற எண் முக்கிய அங்கம் வகிக்கின்றது. படத்தில் ஆறு முன்னணி கதாபாத்திரங்கள், ஆறு படத்தொகுப்பாளர்கள், அதுமட்டுமல்லாமல் ஆறு இசையமைப்பாளர்களையும் ஒன்று கூடி படத்தை இயக்கியுள்ளார் சிம்புதேவன்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படம் முழுக்க ஆறு எழுத்துக்கள் என்பது சொல்லப்படாத ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் ஆறு எழுத்துக்கள், படத்தின் கதையும் ஆறு பேரை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், சாம் சி.எஸ்., ஷான் ரோல்டன், ஜிப்ரான், பிரேம்ஜி என ஆறு இசையமைப்பாளர்கள் ஒன்று கூடியுள்ளனர். இது அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிரச் செய்துள்ளது. விரைவில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details