’பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சசி இயக்கியுள்ள படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இதில் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். அபிஷேக் பிலிம்ஸ் எஸ்.ரமேஷ் தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு சித்து குமார் எனும் புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சூரியன் எப்.எம் அலுவலகத்தில் நடைபெற்றது.
’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசை வெளியீட்டு விழா - gv prakash
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
![’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசை வெளியீட்டு விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3469039-223-3469039-1559646969420.jpg)
Sivappu Manjal Pachai movie audio launch
’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசை வெளியீட்டு விழா
இயக்குநர் சசி, சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளர் சித்து குமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். சசி படம் சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும், அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. தமிழ் சினிமா ரசிகர்கள் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.