சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'டான்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, சூரி, எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, காளி வெங்கட், பாலசரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சிவகார்த்திகேயனின் 'டான்' 2ஆம் கட்ட படப்பிடிப்பு நாளை தொடக்கம்! - டான் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'டான்' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை (மார்ச் 22) சென்னையில் தொடங்குகிறது.
don
இப்படத்தை லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் தொடங்கி நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை (மார்ச் 22) சென்னையில் தொடங்குகிறது.