தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'ஹீரோ' திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

hero movie

By

Published : Nov 4, 2019, 8:21 PM IST

Updated : Nov 4, 2019, 8:37 PM IST

சிவகார்த்திகேயன் - ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகிவரும் படம் 'ஹீரோ'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், ’இரும்புத்திரை’ படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயன்-கல்யாணி பிரியதர்ஷன்-அர்ஜுன்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் 7ஆம் தேதி நிறைவடையும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதனிடையே, இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி, யுவன்சங்கர் ராஜா 'கெட் ரெடி புள்ளிங்கோஸ்' என ட்வீட் செய்துள்ளார்.

ஹீரோ படத்தின் இந்த அறிவிப்பை அடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் யுவன்சங்கர் ராஜா ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ட்ரோல் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க...

அனுஷ்காவின் 'நிசப்தம்' டீஸர் வெளியீடு தேதி மாற்றம்!

Last Updated : Nov 4, 2019, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details