இயக்குநர் அட்லியின் உதவியாளர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் டான். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
லைக்கா புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முதல்முறையாக கல்லூரி மாணவர் வேடத்தில் நடிக்கிறார்.
இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் எஸ்ஜே சூர்யா, காளி வெங்கட், முனீஸ்காந்த், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சிவாங்கி, வீஜே விஜய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப். 11) கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது.
சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு தொடங்கியது! - don movie shoot begins in coimbatore
லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
![சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு தொடங்கியது! don movie shoot begins in coimbatore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10580527-thumbnail-3x2-don.gif)
don movie shoot begins in coimbatore
இதையும் படிங்க... சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்.18இல் தொடங்குகிறது!
TAGGED:
டான் படப்பிடிப்பு தொடங்கியது