சென்னை:சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'டாக்டர்'. இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் அமைந்தது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்செய்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'டான்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
மேலும் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட், சிவாங்கி கிருஷ்ணகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து எஸ்.கே. புரொடக்ஷன் தயாரித்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அனிருத் இசை அமைத்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். 'டான்' திரைப்படம் மார்ச் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய முறையில் கதாநாயகன் தேடல்!