தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 3, 2021, 2:13 PM IST

Updated : Jan 3, 2021, 3:32 PM IST

ETV Bharat / sitara

நிறைவுபெற்ற 'டாக்டர்' படப்பிடிப்பு - 'செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கமா'வுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

நிறைவுபெற்ற 'டாக்டர்' படப்பிடிப்பு
நிறைவுபெற்ற 'டாக்டர்' படப்பிடிப்பு

'கோலமாவு கோகிலா' மூலம் கோலிவுட்டில் இயக்குநராக முத்திரைப் பதித்த நெல்சன், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை கே.ஜெ.ஆர். ஸ்டுடியோவுடன் இணைந்து தனது எஸ்.கே. புரொடக்ஷன் நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். ஹீரோயினாக பிரியங்கா, அனிருத் இசையில் படம் வேகமாக வளர்ந்து வந்தது.

படப்பிடிப்பு முடிவுக்குப்பின் வெட்டபடத் தயாராக இருக்கும் 'கேக்’

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

'டாக்டர்' படக்குழு

சில மாதங்களுக்கு முன், இப்படத்தில் இடம்பெற்ற 'செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கமா' என்னும் பாடல் யூ-ட்யூப்பில் வெளியிடப்பட்டு, செம வைரலாகி படத்திற்குப் பெரிய புரோமேஷனை தந்தது குறிப்பிடத்தக்கது.

படம் முடிவுற்றநிலையில் மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்

இப்படத்தை அடுத்து நெல்சன், நடிகர் விஜய் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இம்மாதம் வெளியாகும் சசிகுமாரின் 'ராஜ வம்சம்'

Last Updated : Jan 3, 2021, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details