தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’உடன்பிறப்பே’ இயக்குநருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

சசிகுமார் நடித்துள்ள 'உடன்பிறப்பே' படத்தின் இயக்குநருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உடன்பிறப்பே
உடன்பிறப்பே

By

Published : Aug 6, 2021, 2:12 PM IST

நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நான்கு படங்களைத் தயாரித்துள்ளார். அதில் 'கத்துக்குட்டி' படத்தை இயக்கிய இரா.சரவணனின் 'உடன்பிறப்பே' படமும் ஒன்று.

சசிகுமார், ஜோதிகா நடித்துள்ள இப்படம் உறவுகளின் இடையே உள்ள சிக்கல்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "இயக்குநர் இரா.சரவணனின் வெற்றியைக் கொண்டாடக் காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்" என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் வெளியிட்ட பதிவு

இதற்கு இயக்குநர் இரா.சரவணன் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், "சிவகார்த்திகேயனின் பேரன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாய் உடன்பிறப்பே படம் நிச்சயம் நற்கவனம் பெறும், வெல்லும்.

ஐந்து வருடங்கள் கழித்து இரண்டாவது படம் இயக்கும் ஒருவனுக்கு, முன்னணி கலைஞனின் வாழ்த்து. ராஜபலம்! எல்லோருக்கும் பெய்யும் மழையாய் உதவுகிற இந்த மனசு இருக்கே" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஓடிடியில் வெளியான நவரசா திரைப்படம்

ABOUT THE AUTHOR

...view details