நடிகர் அஜித்குமார் இன்று (மே 1) தனது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
தல அஜித் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் - சிவகார்த்திகேயன்
சென்னை: தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன்
அந்தவகையில் அஜித்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் ஏகன் படத்தில் அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “நீங்கள் வாழ்வில் பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்ததுபோல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள். பேரன்புடன் சிவகார்த்திகேயன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.