தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் பாலா படத்தை விளம்பரப்படுத்தும் சிவகார்த்திகேயன்! - Latest kollywood news

நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

By

Published : Sep 19, 2020, 7:58 PM IST

மலையாளத்தில் ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் வெளியான 'ஜோசப்' திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. கொலையை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகிவருகிறது.

ஆர்.கே. சுரேஷ் நாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் பாலா தனது பி. ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

மலையாள இயக்குநர் எம். பத்ம குமார் இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 23ஆம் தேதி காலை 9:30 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி ஆர்.கே. சுரேஷ் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details