நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக உள்ளார். சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து தனது கடின உழைப்பால், தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளார்.
இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் ஆராதனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், ஜூலை 12ஆம் தேதி இந்த தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில், '18 வருடங்களுக்குப் பிறகு அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்' என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். தற்போது தனது மகனுக்கு 'குகன் தாஸ்' என்று பெயரிட்டுள்ளார்.