நாடோடிகள் 2 படத்தையடுத்து சசிகுமார் நடித்துள்ள படம் ராஜவம்சம். சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கதிர்வேலு இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நிக்கி கல்ராணி, தம்பி ராமையா, சிங்கம் புலி, ரேகா, நிரோஷா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். கூட்டுக் குடும்பமும் அதனால் ஏற்படும் நன்மைகளும், அவற்றை தொலைத்துவிட்டு தற்போதுள்ள வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பதே டீசரில் உள்ளது. அதிலும் இது 'அம்பானி ஃபேமிலி இல்ல அன்பான ஃபேமிலி' என்று சசிகுமார் பேசும் வசனம் சிறப்பாக உள்ளது. இது தவிர சசிகுமார் ஆக்ஷனில் தூள்கிளப்பியுள்ளது சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.