இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, சமுத்திரக்கனி, ஆர்.கே. சுரேஷ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
#NVPTrailer பாசமலரின் புதிய வெர்ஷன்: நம்ம வீட்டு பிள்ளை ட்ரெய்லர் வெளியீடு! - சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
nvp
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்குநிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லரில், உறவுமுறைகளையும் சகோதர பாசத்தையும் வெளிபடுத்தும் விதமாக படம் இருப்பது தெரியவருகிறது.