சீமராஜா படத்தையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மிஸ்டர் லோக்கல் ரீலிஸ் தேதி அறிவிப்பு! - Sivakarthikeyan MR local to be release on may 17
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படம் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது.
Sivakarthikeyan MR local to be release on may 17
மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் பாப் தமிழா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
முன்னதாக உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.