தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரை மலையாள சினிமா பக்கம் ஈர்த்த திரைப்படம் ‘பிரேமம்’ என்றால் மிகையாகாது. இத்திரைப்படத்தில் நிவின் பாலியின் கல்லூரி கால காட்சிகள் பலரையும் ஈர்த்தது. நிவின் பாலி தாடியுடன் இருக்கும் அந்த கெட்டப் மிகவும் பிரபலம். இந்நிலையில், சிவகார்த்திகேயன் இதே கெட்டப்பில் ‘டான்’ படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டான் படத்துக்கு பிரேமம் லுக் - டான் படத்துக்கு பிரேமம் லுக்
சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘டான்’ படத்தில் அவருக்கு பிரேமம் நிவின் பாலி கெட்டப் என தகவல் வெளியாகியுள்ளது.
sivakarthikeyan in premam look
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘டான்’. இதில் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரொமான்ஸ் - ஆக்சன் கலைவயாக உருவாகிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார். அதில் ஒரு கெட்டப், பிரேமம் நிவின் பாலி போல் அமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'!