தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘நம்ம கல்வி முறையில் படிக்க முடியும் ஆனால் சாதிக்க முடியாது’ - 'ஹீரோ' டீசர் வெளியீடு! - சிவகார்த்திகேயன் புதிய படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

hero

By

Published : Oct 24, 2019, 2:48 PM IST

'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமாக இருக்கும் சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' டீசர் வெளியாகியுள்ளது. 'இரும்புத்திரை' இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கிவரும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் நிலையில், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் 'ஹீரோ'வின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டான நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டாகிவருகிறது.

இரும்புத்திரை போன்று இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ‘நம்ம கல்வி முறையில் எல்லோரும் படிக்க முடியும், ஆனால் எல்லோரும் சாதிக்க முடியாது, இந்த சிஸ்டத்தை மாற்றுவதற்கு காமன்மேன் பத்தாது, ஹீரோ வேணும்’ போன்ற வசனங்கள் மூலம் இயக்குநர் கல்வி விவகாரத்தை தொழில்நுட்ப துணையுடன் கையில் எடுத்திருக்கின்றார். படம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது தீபாவளியை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளிலும் ஹீரோ படத்தின் டீஸர் ஒளிபரப்பப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details