தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஹீரோ' சிவாவின் இரண்டாம் பார்வை! - ஹீரோ

நடிகர் சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan

By

Published : Oct 18, 2019, 11:52 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் இறுதியாக இயக்குநர் பாண்டிராஜின் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. கார்த்திக் சுப்பராஜின் 'பேட்ட' திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது.

இதை தொடர்ந்து 'இரும்புத் திரை' படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் 'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன நடிக்கிறார்.

செகண்ட் லுக் போஸ்டர்

இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிக்கிறார். அர்ஜுன், அபய் தியோல் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details