சிவகார்த்திகேயன் - 'இரும்புத்திரை' படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், 'இரும்புத்திரை' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சுயமாக சிந்திக்கத் தெரிந்தவன் 'ஹீரோ' - சிவகார்த்திகேயன் சொல்லும் பாடம் - சிவகார்த்திகேயன் ஹீரோ அப்டேட்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
அக்டோபர் மாதம் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் இப்போதைய கல்வித்துறையில் நடைபெற்றுவரும் வியாபரம், ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இப்படம் பேசுகிறது.