'மிஸ்டர் லோக்கல்' படத்தை தொடர்ந்து, மித்ரன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ஹீரோ திரைப்படத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
'ஹீரோ' படத்தின் அடுத்த அப்டேட்! - மிஸ்டர் லோக்கல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'ஹீரோ' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.
ஹீரோ
'நாச்சியார்' படத்தில் ஜிவி-க்கு ஜோடியாக நடித்த இவானா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன், ஆக்சன் கிங் அர்ஜூன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு இசையை யுவன் சங்கர் ராஜா மேற்கொள்கிறார். இப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் சிவா.
சிவாகார்த்திகேயன் நடிப்பில் மே 1 ஆம் தேதி 'மிஸ்டர் லோக்கல்' படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.