அப்பாவின் சாயலில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம் சிகரெட் வாங்கும்போதெல்லாம் விரல்கள் நடுங்குகின்றன - நா. முத்துக்குமார்
அப்பாவின் பாசத்தை கவிதையாக வடித்த நா. முத்துக்குமார் பிறந்தநாள் அன்று சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தந்தை மீது அதீத பாசம் கொண்டவர் சிவகார்த்திகேயன். விருது விழாக்களில் எல்லாம் யாரை ரொம்ப மிஸ் பண்றிங்கனு கேட்டா, யோசிக்காமல் என் அப்பாவைதான் என்பார் சிவகார்த்திகேயன்.
பல சமயங்களில் அப்பாவை நினைத்து உடைந்து அழுதிருக்கிறார். இன்று தனக்கு ஆண் குழந்தையை பிறந்ததை தனது அப்பாவே பிறந்ததாக நினைக்கும் அளவுக்கு அப்பா மீது பாசம் கொண்டவர்.
18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக என சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது அப்பா குறித்து பல நினைவுகளை அவர் பகிர்ந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் சிறை கண்காணிப்பாளராக இருந்தவர். அவர்தான் தனக்கு ஹீரோ என்பார் சிவகார்த்திகேயன். தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியபோது, அதை தன் அப்பா புகைப்படம் இருக்கும் இடத்தின் அருகே அம்மாவிடம் கொடுத்து ஆசி பெற்ற புகைப்படம் வைரலானது. தனது சுகதுக்கங்களில் எல்லாம் அப்பா பங்கேற்க வேண்டும் என்று விரும்பிய சிவா, தன் அப்பாவை இழந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது.
அப்பாவின் மீது இத்தனை பாசம் வைத்திருந்த சிவா படத்தில்தான் அப்பாவின் பாசத்தை சொல்லும் ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ பாட்டு இடம்பெற்றது. இன்று சிவா தன் அப்பா தன்னிடம் திரும்பி வந்ததாக நினைக்கிறார். வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க:சிவகார்த்திகேயனுக்கு பிரபலங்கள் வாழ்த்து!