சென்னை: நாளை (ஏப். 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் திரையரங்குகளில் இரவுக்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊராடங்கு காரணமாக திரையரங்கில் வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மேலும் குறையலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸை எதிர்நோக்கி காத்திருந்த புதிய படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வெளிவர இருந்த சசிக்குமாரின் எம்ஜிஆர் மகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதே போல் ரியோ நடித்த பிளான் பண்ணி பண்ணனும், சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய் சேதுபதியின் லாபம், விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படங்களை அடுத்த மாதம் அல்லது நிலைமை கொஞ்சம் சீராகி தளர்வுகள் அளிக்கப்பட்டவுடன் வெளியிடலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.
இதையும் படிங்க: 'எட்டு தோட்டாக்கள்' வெற்றியின் புதிய படம்!