'ஹீரோ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் பட டப்பிங் பணி துவக்கம்! - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டப்பிங் பணி இன்று (செப்.17) முதல் துவங்கியுள்ளது.
இந்நிலையில் 'டாக்டர்' படத்தின் டப்பிங் பணிகள் இன்று (செப்.17) முதல் துவங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக, இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகனுக்கு, தொகுப்பாளினி அர்ச்சனா டப்பிங் பேசியுள்ளார்.
'டாக்டர்' படத்திலிருந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.