தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Don Movie Update:அடாது மழையிலும் டப்பிங் பணியில் பிஸியான சிவகார்த்திகேயன் - சிவகார்த்திகேயனின் டான் அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டான்' படத்தின் டப்பிங் அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

By

Published : Nov 9, 2021, 3:35 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'டாக்டர்'. நெல்சன் இயக்கிய இத்திரைப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் 'டான்'. அறிமுக இயக்குநர் சி.பி. சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், யோகிபாபு, சூரி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 'டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அடாது மழையிலும் விடாது டப்பிங். டான் படத்தில் எனது டப்பிங் பணிகளை நிறைவு செய்திருக்கிறேன். நிறைய உணர்ச்சிகள், என் கல்லூரி நாள்களை மீண்டும் பார்த்தேன். இந்தப் பயணம் பிடித்திருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விருது பட இயக்குநருடன் கைக்கோர்த்த மம்முட்டி!

ABOUT THE AUTHOR

...view details