சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ளார். அவரது நடிப்பில் டாக்டர் படம் வெளியாக உள்ளது. இவருக்கு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவியும், ஆராதனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் என பதிவிட்டு இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் - சிவகார்த்திகேயன்! - sivakarthikeyan blessed with baby boy
18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி.
ஆண் குழந்தைக்கு தந்தையான சிவகார்த்திகேயன்