உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மான்செஸ்ட்ரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியை காண்பதற்காக இருநாட்டு ரசிகர்களும் மைதானத்தில் மிகுந்த ஆர்வத்துடன் குவிந்துள்ளனர். பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி என்றாலே ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்புகள் இருக்கும். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் நிகழும் அபாயம் ஏற்பட்டது.
அந்த வகையில் இன்று நடக்கும் போட்டிகளில் இருநாட்டு ரசிகர்களும் பயங்கர எதிர்பார்ப்புடன் ஆட்டத்தை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில் இணை பிரியா தோழர்களாக வலம் வரும் சிவகார்த்திகேயன், அனிருத் ஆகிய இருவரும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர். இங்கிலாந்திற்கு சுற்றுலா சென்றுள்ள இருவரும் மைதானத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.