நெல்சன் இயக்கத்தில் 'டாக்டர்' படத்தை முடித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது 'டான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்தை இயக்குகிறார்.
'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். 'டான்' படத்தை லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தனது எஸ்.கே. புரொடக்ஷன் சார்பில் தயாரித்து, நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தில், நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயனுடன் தான் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்பதை சூரி தங்கிலீஷில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் முதலில் ட்வீட்டை ஒழுங்கா படிங்க.. அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.