நகைச்சுவை நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா ஆகியோர் நடிக்கும் படம் 'நாய் சேகர்'. இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'எடக்கு மடக்கு' எனும் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.