நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கமல்ஹாசனும் திரையுலகில் தங்களது நடிப்பால் சாதித்துக் காட்டியவர்கள். இருவருக்குமான உறவு இணைபிரியாத ஒன்றாகவே இருந்தது.
திரைத்துறையில் தனது இருப்பிடத்தை நிரூபித்த கமல்ஹாசன், பின்நாட்களில் சிவாஜியை 'அப்பா' என்றே அழைத்தார். நடிப்பில் அவரை தன் ஆசானாகவும் ஏற்றுக்கொண்டார். இருவரும் ஒன்றாக இணைந்து 'பார்த்தால் பசி தீரும்' (1962) 'சத்யம்' (1976), 'நாம் பிறந்த மண்' (1977), 'தேவர் மகன்' (1992) உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றனர்.
நடிகர் ரஜினி, சிவாஜி, பிரபு ஆகியோருடன் கமல் சிவாஜியின் அன்பு மகனான பிரபுவிற்கும், கமல்ஹாசனுக்கும் கூட அன்பான உறவு வெகுநாட்களாகவே இருந்துவந்தது. இருவரும் ஒன்றாக திரைப்படங்களும் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதியில், சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசனுக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
பிரபுவின் அன்பு விருந்து
இதைத்தொடர்ந்து, நடிகரும் சிவாஜியின் மகனுமான பிரபு, திரைத்துறையில் 60 ஆண்டுகள் கடந்து சாதனை புரிந்து வருவதற்காக, கமல்ஹாசனை தனது அன்னை இல்லத்திற்கு அழைத்து, அன்பு விருந்து ஒன்றை இன்றுவழங்கியிருக்கிறார்.
நடிகர் கமலை வரவேற்று, பாராட்டி பட்டயத்தை வாசித்து, பரிசளித்த நடிகர் பிரபு மேலும், அவர் கமல்ஹாசனுக்கு பாராட்டு மடல் ஒன்றை வாசித்து காண்பித்து, அதை பரிசாகவும் அளித்திருக்கிறார். இச்சம்பவத்தால் நெகிழ்ந்து போன கமல்ஹாசன், அதை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களோடு பதிவிட்டிருக்கிறார். அதில், 'அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது.' என்று பதிவிட்டிருந்தார். இந்த விருந்து உபசரிப்பு நிகழ்வில், தயாரிப்பாளர் ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உங்களை செல்வந்தராக உணரவைப்பது பயணங்கள் மட்டுமே - டிராவல் மோடில் அஞ்சலி